Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 03 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச பொலிஸான இன்டர்போலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில், இலங்கை கைச்சாத்திடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்டர்போலுடனான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோன் கைச்சாத்திடவுள்ளார்.
உகண்டாவில் நடைபெற்றுவரும் சர்வதேச பொலிஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள பொலிஸ்மா அதிபர், அங்கு வைத்து இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடவுள்ளார்.
உகண்டாவில் நடைபெற்றுகொண்டிருக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, பொலிஸ்மா அதிபர் நாட்டைவிட்டுப் புறப்பட்டுச் சென்றிருந்தார். அதனையடுத்து, பதில் பொலிஸ்மா அதிபராக மேல்மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளதுடன் இவர் 5ஆம் திகதிவரையில் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .