2025 ஜூன் 19, வியாழக்கிழமை

சர்ச்சையை ஏற்படுத்திய தாலிக் கொடி - ஆலய நிர்வாகம் அறிக்கை

Editorial   / 2024 ஓகஸ்ட் 11 , மு.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை – திருகோணேஸ்வரர் ஆலயத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கத் தாலி ஒன்று கொள்ளையிடப்பட்டிருப்பதாக வெளியான தகவலை , ஆலய நிர்வாகம் மறுத்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கத் தாலி காணாமல் போனதாக கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், 2010ஆம் ஆண்டு ஆலயத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 3 1/4 பவுன் எடைகொண்ட தாலியும் கொடியுமே காணாமல் போயிருப்பதாக திருகோணேஸ்வரர் ஆலய பரிபாலண சபையின் செயலாளர் ஊடகம் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் காணாமல் போன குறித்த 3 1/4 பவுன் எடைகொண்ட தாலி மற்றும் கொடியை மீளப் பெற்றுத் தருவதாக குறித்த ஆலயத்தின் குருமார்களால் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். R
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .