Editorial / 2021 மார்ச் 15 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் நீதி வேண்டிய உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில், அம்பாறை மாவட்ட இளைஞர்கள் சிலரும் இணைந்துகொண்டு தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தனர்.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் 15 ஆவது நாளாக நேற்றும் (14) தொடர்ந்தது.
நீதி வேண்டிய இந்தப் போராட்டம், நல்லூர் - நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
அதில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மதத் தலைவர்களெனப் பலரும் தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
போராட்டத்தை முன்னெடுப்போர் “ஸ்ரீ லங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் ஊடாக, ஸ்ரீ லங்கா அரசால் புரியப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் மனித நேயத்துக்கு எதிரான குற்றங்கள், தமிழ் இனத்துக்கு எதிராக இனவழிப்பு என்பவற்றுக்கு சர்வதேச நீதி வேண்டும். தமிழ் இனத்தின் மீதானா இனவழிப்பு தொடராது இருப்பதற்கு, தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியம் என்பன அங்கிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளையே முன்வைத்துள்ளனர்.
31 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
47 minute ago
2 hours ago