2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சல்யூட் அடிக்காததால் பொலிஸ் மீது தாக்குதல்

Simrith   / 2023 செப்டெம்பர் 26 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனக்கு சல்யூட் அடிக்கவில்லை என்பதால், புதிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் காதில் பளார் எனத்  தாக்கியதாக சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவம் மேல் மாகாண வடக்கு பிரிவுக்கு உட்பட்ட பொலிஸ் நிலையம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட புதிய பொலிஸ் கான்ஸ்டபிள் தனியார் வைத்தியசாலைக்கு  அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

புதிய பொலிஸ் கான்ஸ்டபிள்  வங்கி ஒன்றின் முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்ததாகவும் சீருடையில் வந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு குறித்த கான்ஸ்டபிள்  சல்யூட் அடிக்கவில்லை  என்பதற்காக அவர் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X