2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘சாதாரண மக்களே பாதிக்கப்படுகின்றனர்’

Editorial   / 2018 டிசெம்பர் 03 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால் சாதாரண மக்களே பாதிக்கப்படுவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

மஹிந்த மற்றும் மைத்திரிபால சிறிசேனவால் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள நிலமையால் பொது மக்களே அதிக அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உரம் மற்றும் எரிபொருள் விலையைக் குறைப்பதன் ஊடாக இந்த நிலைமைக்கான காரணத்தை தேட முடியாதென்றும் இன்று நாட்டின் பொருளாதார நிலை 50 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சுஜீவ குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதோடு பெரும்பான்மை யாருக்கு உண்டென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், மீண்டும் நாட்டை சாதாரண நிலைக்கு கொண்டு செல்லும் பொறுப்பு ஜனாதிபதியிடமே உள்ளதாகவும் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்காக நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த நாட்டின் எதிர்காலத்துக்காக விரைவான நடவடிக்கைகைளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுப்பதாகவும் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .