2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

சாரதி உள்ளிட்ட நால்வர் இடைநிறுத்தம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருதானை மற்றும் கொழும்பு கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் ரயிலின் சாரதி உள்ளிட்ட நால்வர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

மருதானையில் இருந்து களுத்துறை நோக்கிய பயணித்த 741 ஆம் இலக்க ரயில் மற்றும் கொழும்பு, கோட்டையில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த 412ஆம் இலக்க ரயில் என்பன இன்று (28) காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியிருந்தன.

இந்த விபத்தை அடுத்து, ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .