Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 14 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்பிடிய பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்துக்கு சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றில், குறித்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநர் இல்லாத வேளை பார்த்து, இனந்தெரியாத நபரொருவர் பஸ்ஸை நெடுதூரம் செலுத்திச் சென்றுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
உடுகம டிப்போவுக்குச் சொந்தமான பஸ் ஒன்று, சிறிது நேரம் எல்பிடிய பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு சாரதியும் நடத்துநரும் கீழிறங்கி சென்றிருந்த நிலையில், இனந்தெரியாத நபரொருவர் குறித்த பஸ்ஸில் ஏறி, 1 கி.மீ வரை பஸ்ஸை செலுத்திச் சென்றுள்ளார்.
பின்னர் பஸ்ஸை பின்தொடர்ந்த வண்ணம் ஓட்டோவில் சென்ற பஸ்ஸின் சாரதியும் நடத்துநரும், பஸ்ஸை வழிமறித்து குறித்த நபரை மடக்கி பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரின் மனநிலை தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்ளவும், மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago