2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

சிகிச்சையை தவிர்த்தால் சட்ட நடவடிக்கை

J.A. George   / 2020 ஒக்டோபர் 07 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சிலர் சிகிச்சைகளுக்காக செல்வதை தவிர்ப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

சிகிச்சைகளை தவிர்ப்பதானது, தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் செயல் என்பதால் அவ்வாறு செயற்படுவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் பெருமளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகுவதால், சுகாதார அமைச்சினால் குறித்த மாவட்டத்தில் PCR பரிசோதனைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .