Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூன் 08 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.ஆர்.லெம்பேட்
மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற மகப்பேற்று சிகிச்சைகளின் போது மரணமடைந்த சிந்துஜா மற்றும் பட்டி தோட்டத்தை சேர்ந்த வேணுஜா மற்றும் அவரின் சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி இடம்பெற்ற போராட்டத்தில் பொதுமக்கள் சார்பாக முன்னின்று போராடியவர்கள் மூவர் மன்னார் பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை(8) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சட்ட விரோதமாக பொது மக்களை ஒன்று கூட்டியமை மற்றும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியமை உள்ளிட்ட பல பிரிவுகளில் சம்பந்தப்பட்ட மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக பொது அழைப்பின் பெயரில் கடந்த டிசம்பர் மாதம் ஒன்று கூடிய பொதுமக்கள், மன்னார் பொது வைத்தியசாலையில் இடம் பெறும் பல்வேறு சீர்கேடுகளுக்கு எதிராக அமைதியான போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையில் போராட்டக்காரர்களின் கோரிக்கை தொடர்பில் பல்வேறு வாக்குறுதிகளை அதிகாரிகளால் வழங்கப்பட்ட போதிலும் அதை ஏற்க மறுத்த சில போராட்டக்காரர்களால் போராட்டம் வன்முறையாக மாற்றம் அடைந்தது.
இந்த நிலையில் வீதிகளை மறித்தும் டயர்களை கொளுத்தியும் போராட்டகாரர்கள் சிலர் தங்கள் எதிர்ப்புக்களை தெரிவித்த நிலை போராட்டத்தில் சில விசமிகள் புகுந்து பொலிஸார் மீதும் வைத்தியசாலை மீதும் கல் வீச்சுக்களை மேற்கொண்டு போராட்டத்தை திசை திருப்பி இருந்தனர்.
போராட்டம் இறுதியில் சுமுகமான நிலையில் நிறைவடைந்த போதிலும் மக்கள் சார்பாக போராட்டத்தில் கலந்து கொண்ட மூவரை பல மாதங்கள் கழித்து மன்னார் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (8) கைது செய்துள்ளனர்.
சிந்துஜா மற்றும் வேணுஜா வின் மரணம் தொடர்பில் விசாரணைகள் இதுவரை முடிவுறுத் தப்படாத நிலையில் அவர்களுக்கு, அவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்காத நிலையில் அவர்கள் சார்பாக போராடிய மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது ,
35 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago