2025 மே 07, புதன்கிழமை

சிறுமிகள் துஷ்பிரயோகம்: ஆடிய ஆசிரியர் கைது

Janu   / 2024 ஜூலை 14 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடன வகுப்பிற்கு வந்த சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் நடன வகுப்பு ஆசிரியர் ஒருவர் சனிக்கிழமை (13) கைது செய்யப்பட்டதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

ஹங்வெல்ல - படேவெல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நடன ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர், தனது நடன வகுப்பிற்கு வந்த சிறுமிகளை அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதுடன் வட்ஸ்அப் மூலம் ஆபாச புகைப்படங்களை அனுப்பியுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் தொடர்பில் தலங்கம மற்றும் நவகமுவ பொலிஸாருக்கும் இவ்வாறான பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஹங்வெல்ல  பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X