2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

சீன கப்பல் எதிரொலி: தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு

Freelancer   / 2022 ஓகஸ்ட் 17 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் ஆராய்ச்சி கப்பல்  நேற்றையதினம் (16) நங்கூரமிட்டதை அடுத்து தமிழகம் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடிஉள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தின் பாக்கு நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 8 கப்பல்களும், 2 விமானம், 3 ஹெலிகொப்டர்கள் உள்ளிட்டவை இடைவிடாத ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X