2026 மே 01, வெள்ளிக்கிழமை

’சீனியால் நாட்டுக்கு இழப்புகள் ஏதுமில்லை’

Editorial   / 2021 மார்ச் 15 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல, நாட்டில் சீனி கொள்ளையொன்று இடம்பெறவில்லை என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆடிகல தெரிவித்துள்ளதோடு, வரி குறைக்குப்படும்போது வருமானம் இழக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், சீனி வரியால் நாட்டுக்கு 15.9 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்தாக நிதி அமைச்சு தெரிவித்திருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளன. எனினும் நிதி அமைச்சு அவ்வாறான கருத்துகளைத் தெரிவிக்கவில்லை என்றார்.
அரசாங்கத்துக்கு வரியைக் குறைக்கும் அதிகாரம் காணப்படுவதாகவும், வரியைக் குறைக்கும்போதும் வருமானம் இழக்கப்படுமெனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .