Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி மாவட்டத்தில் தொடர்ந்தும் மழையுடனான வானிலை நிலவிவருவதுடன், இதனால் 14 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த, 12,943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் காலி மாவட்டத்தில், இம்முறை இருவர் இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பலத்த காற்று மற்றும் வௌ்ளம் காரணமாக, 16 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள அதேவேளை, 773 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளதுடன், 172 வர்த்தக நிலையங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உலர் உணவுகள், மாவட்ட செயலகங்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு மக்களுக்கு அனர்த்த நிவாரணங்களை வழங்கும் பொருட்டு, 90 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
29 minute ago
45 minute ago
56 minute ago