2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சீருடைக்கான பண வவுச்சர் பெறுமதி அதிகரிப்பு?

Editorial   / 2018 ஒக்டோபர் 13 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை மாணவர்களுக்கான 2019ஆம் ஆண்டு சீருடைக்கான பண வவுச்சர்களை விநியோகிக்கும் பணி, எதிர்வரும் சில வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவவிதாரன தெரிவித்தார்.

இம்முறை இதன் பெறுமதி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், பாடசாலை மாணவர்களின் சீருடைக்கு தேவையான துணியின் பெறுமதியை கவனத்தில் கொண்டு அதற்கான விலையை தீர்மானிப்பதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அனைத்து மாவட்ட செயலாளர் பிரிவு மட்டத்தில் விலைகளை பெற்று இறுதி விலையை தீர்மானித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மூன்றாம் தவணை நிறைவடைவதற்கு முன்னர் அனைத்து மாணவர்களுக்கும் இந்த வெவுச்சர்கள் வழங்கப்படவிருப்பதாக, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .