Editorial / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது ஆண்டு விழா நிகழ்வுக்கு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படும் என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் செப்டெம்பர் 3ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ள இந்த நிகழ்வுக்கு, கூட்டமைப்புடன் இணைந்து செயற்படும் சகல கட்சிகளின் செயலாளர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதனைதவிர எந்தவொரு நபருக்கும் தனிப்பட்ட அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
“எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தற்போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுமா?” என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்த மஹிந்த அமரவீர, கட்சியின் நிகழ்வுக்கு கட்சியின் உறுப்பினர்களுக்கு அழைப்பு தேவையில்லை என்றும், கட்சிக்காக அவர்களால் பங்கேற்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
3 hours ago
6 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
02 May 2026