Editorial / 2019 நவம்பர் 03 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காப்பாளராக உள்ள, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை, அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்திரிகா குமாரதுங்க, புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதை அடுத்தே, அவரை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வரும் செவ்வாய்க்கிழமை இரவு கட்சியின் மத்திய குழுவின் அவசர கூட்டத்துக்கு, அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில், சந்திரிகா குமாரதுங்கவை கட்சியில் இருந்து நீக்குவதற்கு அவர் பரிந்துரை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வரும் செவ்வாய்க்கிழமை காலை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் இயக்கத்தின் மாநாடு சந்திரிகா குமாரதுங்க தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெறவுள்ளது.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026