2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 05 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

ஆனமடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கட்டக்கடுவ பிரதேசத்தில் பணத்துக்கான சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர், நேற்று (04) இரவு, ஆனமடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முந்தல், ஆராச்சிக்கட்டுவ, ஆண்டிகம, நுரைச்சோலை, கற்பிட்டி , ராஜகதளுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 30, 32, 33, 35, 41, 42, 49, 52, மற்றும் 59 வயதுகளையுடையவர்களே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை, நாளை மறுதினம் (07) ஆனமடுவ நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கோரி, பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .