2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

சென்னையிலிருந்து தங்கம் கடத்திய 14 இலங்கையர்கள் கைது

Editorial   / 2019 நவம்பர் 01 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்த முற்பட்ட 14 பேர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

30 முதல் 50 வயதுடைய கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 7.30 மணியளவில் சென்னையில் இருந்து வந்த ஏ.ஐ.273 என்ற விமானத்தில் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 4 கிலோ 700 கிராம் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .