2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

செம்மணி விவகாரம்: நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

Freelancer   / 2025 ஜூலை 06 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

செம்மணி புதைகுழி விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில், தமிழர் மக்கள் இயக்கம், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் மேலூர் பஸ் நிலையம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசு மீது ஐ.நா மனித உரிமை ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனவும்  சர்வதேச நீதிமன்ற விசாரணை நடத்தி சிங்கள இராணுவ குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி, தமிழர் மக்கள் இயக்கம் மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .