S.Renuka / 2026 மார்ச் 26 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவருமான சோனியா காந்தி, உடல்நிலை பாதிப்பு காரணமாக புதுடெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவுமனையில் செவ்வாய்க்கிழமை (24) அன்று அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதை சோனியா காந்தி உணர்ந்ததாகவும், அதன் காரணமாக அவர் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
சோனியா காந்தியின் உடல்நிலை கவலைக்குரிய தீவிர பாதிப்புகள் ஏதும் இல்லை என்றும், அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக, சோனியா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல் நிலை குறித்து இன்று வியாழக்கிழமை (26) மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், சோனியா காந்தியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு ஏற்பட்டுள்ள தொற்றுக்கு ஆண்டிபயாட்டிக் மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சோனியா காந்தி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 minute ago
1 hours ago
29 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
29 Mar 2026