Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Thipaan / 2015 டிசெம்பர் 21 , பி.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கஸினோத் துறையில் மிகவும் பிரலமான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் பக்கர், 'கிறவுன் றிஸோட்' எனும் நிறுவனத்தின் பணிப்பாளர் பதவியிலிருந்து, நேற்று திங்கட்கிழமை(21) இராஜினாமாச் செய்தார். ஆயினும், உலக அளவில் கஸினோத் துறையில் செயற்படும் கிறவுன் றிஸோட்டின் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரப் பதவியொன்றில் இருப்பார்.
அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட இந்தக் நிறுவனத்தில், பில்லியனரான பக்கர், 53 சதவீத உரிமையைக் கொண்டவர்.
மெல்கோ கிறவுன் என்டர்டெய்ன்மென்ட் அன்ட் அலன் கம்பனியின் இணைத் தலைவராக அவர், தொடர்ந்தும் இருப்பார்.
இவர், அதிக காலத்தை வெளிநாடுகளில் செலவழிப்பதால், தனது பதிவியை இராஜினாமாச் செய்தார்.
'நான், சிட்னி, மெல்பேர்ண் மற்றும் லாஸ் வேகாஸ் மற்றும் கிரவுணின் இணைய செயற்பாடுகளில் எனது கவனத்தை அர்ப்பணிக்க எண்ணுகிறேன்' என அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
6 hours ago
21 May 2025