2025 ஜூலை 09, புதன்கிழமை

ஜனாதிபதியின் கீழ் ஊடக அமைச்சின் கீழான நிறுவனங்கள்

Editorial   / 2018 நவம்பர் 07 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகத்துறை அமைச்சின் கீழ் காணப்படும் நிறுவனங்கள் உள்ளிட்ட விடயதான விவகாரங்கள் அனைத்தும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக, அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் கீழ், ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய அமைச்சுகளின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ள போதிலும், அவரது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய நிறுவனங்களின் எண்ணிக்கை குறைவடையவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், தற்போது நடைபெற்றுவரும் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .