Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 03 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் தற்போது நிலவிவரும் அரசியல் நெருக்கடி, மிக விரைவில் இணக்கமாகத் தீர்க்கப்படாவிட்டால், ஜனாதிபதியின் வாசஸ்தலத்தை முற்றுகையிடுவதைத் தவிர வேறு வழி தமக்கில்லையென, ஐக்கிய தேசிய முன்னணி, நேற்று (02) தெரிவித்தது.
ஐ.தே.முவாலும் ஏனைய தரப்புகளாலும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட, “யுக்திய உதேச” (நீதிக்கான எழுச்சி) போராட்டம், தங்காலையை நேற்றுச் சென்றடைந்திருந்த நிலையில், அங்கு வைத்தே, இக்கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டன.
அங்கு கருத்துத் தெரிவித்த ஐ.தே.கவின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹரீன் பெர்ணான்டோ, “அரசியல் நெருக்கடி விரைவில் தீர்க்கப்படாவிட்டால், நாடு தழுவிய போராட்டங்களுக்குச் செல்வதையும், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை முற்றுகையிடுவதையும் தவிர, எமக்கு வேறு வழி இல்லை. இந்தப் போராட்டம், ஐ.தே.கவின் போராட்டம் இல்லை. மாறாக, இந்நாட்டு மக்கள் அனைவரினதும் போராட்டம். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை உறுதிசெய்வதற்கான போராட்டம்” என, அவர் தெரிவித்தார்.
அதேபோன்று, நாட்டின் தற்காலிகப் பாதுகாவலராகவே ஜனாதிபதிப் பதவி காணப்படுகிறது எனத் தெரிவித்த அவர், மக்களின் விருப்புகளுக்கு அவர் தலைவணங்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago