Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2018 நவம்பர் 06 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொறுமை, அடக்கம், அறிவு, ஆன்மீகம் போன்ற நற்பண்புகள் மனித மனங்களில் குடிகொள்ள வேண்டுமாயின், அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும். அந்த இலக்கை அடையும் வகையில் ஒளி தீபங்களை ஏற்றி உலக வாழ் இந்துக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேனென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், ஒளி தரும் தீபங்களால் தீமை எனும் இருள் அகன்று நன்மையெனும் ஒளி எழுவதைப் போல் வாழ்க்கையிலும் ஒளி எழ வேண்டும் என்பதையே தீபாவளி பண்டிகை குறித்து நிற்கின்றது. அத்தோடு ஒருவருக்கொருவர் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து அன்பை பரிமாறிக்கொள்ளும் ஒரு கலாசார நிகழ்வாக இத் தீபத்திருநாள் உலக மக்களை அன்பினால் இணைக்கின்றது என்றார்.
மேலும், பல தசாப்தங்களாக பகைமையினால் ஏற்பட்ட பல்வேறு வேதனைகளை சுமந்து நிற்கும் ஒரு சமூகம் என்ற வகையில், இனங்களுக்கு இடையேயான பகைமையை நீக்கி புரிந்துணர்வையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதன் மூலமே நாடும் மக்களும் நலம் பெறுவர் என்பதை நமது சமூகம் மிக நன்றாக உணர்ந்திருக்கும் இத்தருணத்தில் மலரும் தீபாவளி பண்டிகை நம்மவர்களுக்கிடையிலான கலாசார பந்தத்தினை உறுதிபடுத்திக் கொள்ள கிடைத்திருக்கும் ஒரு அரிய வாய்ப்பாகும் என்பதே எனது எண்ணமாகும்.
தீமையை போக்கும் தீபத்திருநாளை மகிழ்ச்சியோடும் அர்த்தபுஷ்டியோடும் கொண்டாடும் அதேவேளை, அதன்மூலம் அன்பையும் நற்பண்புகளையும் வளர்க்க முயற்சிக்கும் நம்மவர்களுக்கும் உலக வாழ் இந்துக்களுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேனென்று மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
51 minute ago
55 minute ago
58 minute ago