Freelancer / 2021 டிசெம்பர் 20 , பி.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்துக்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோருக்கு அழைப்பு விடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் அந்நியச் செலாவணி மற்றும் நாணயக் கையிருப்பு நிலவரம் குறித்து விசாரிப்பதற்காக இருவரும் அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று ஏற்கெனவே செய்தி வெளியாகியிருந்த நிலையில், மத்திய வங்கி ஆளுநர் அந்தச் செய்தியை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
9 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
20 Mar 2026