2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதியின் வீட்டுக்குத் தீ வைத்த ஆசிரியர் கைது

Editorial   / 2024 மே 28 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது கொள்ளுப்பிட்டியில் அத்துமீறி நுழைந்து அவரது வீட்டில் இருந்த சொத்துக்களை சேதப்படுத்தி வீட்டுக்குத் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நவுட்டுடுவ கிரந்திடிய பிரதேசத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் (36) ஆசிரியர் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இப்போராட்டத்தின் போது, ​​கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இரவு, கொள்ளுப்பிட்டியில் உள்ள  ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்த போராட்டக்குழுவினர் அவரது சொத்துக்களைத் தாக்கி தீயிட்டு சேதப்படுத்தியுள்ளனர்.

 இச்சம்பவம் தொடர்பாக 25க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர். நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X