2024 மே 25, சனிக்கிழமை

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

Freelancer   / 2024 மே 05 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு  இலங்கைக்கு வந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று பிற்பகல் சந்தித்துள்ளார்.

இதன்போது, கடன் மறுசீரமைப்பிற்கான உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட பின்னர் இலங்கையின் அபிவிருத்திக்காக யென் கடன் திட்டத்தின் ஊடாக ஒத்துழைப்பு வழங்குவோம் என ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு, பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதனை ஜப்பான் வரவேற்றுள்ளது.

கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான உடன்படிக்கை எட்டப்பட்டதன் பின்னர் இலங்கையினால் இரு தரப்பு உடன்படிக்கைகளுக்கு செல்ல முடியும் என ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தேசிய நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஜப்பான் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.

இலங்கையும் ஜப்பானும் தீவுகள் எனவும் சுதந்திர மற்றும் திறந்த இந்து சமுத்திர வலயத்தினை உருவாக்குவதற்கு ஜப்பான் இலங்கையுடன் இணைந்து பக்கபலமாக செயற்படும் என்றும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .