2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஜி20 மாநாட்டிற்கு பிறகு இத்தாலி எடுத்த முடிவு

Freelancer   / 2023 செப்டெம்பர் 11 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தில் இருந்து விலக இத்தாலி முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  பெல்ட் அன்ட் ரோடு சாலைமற்றும் கடல் வழி மார்க்கமாக ஆசியாவை ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் இணைக்கும் பெல்ட் அன்ட் ரோடு (பிஆர்ஐ) என்ற திட்டத்தை சீனா அறிவித்துள்ளது.

 

இதற்கமைய  ஜி7 அமைப்பில் இருந்த இத்தாலி மட்டும் கடந்த 2004ம் ஆண்டு சீனாவின் இந்த பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தில் இணைந்து இருந்தது.

இதனை தொடர்ந்து சீனாவின் இந்த பெல்ட் அன்ட் ரோடு திட்டம் தங்கள் நாட்டின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தியாவில் தற்போது செப்டம்பர் 9 மற்றும் 10 திகதியில் நடைபெற்று முடிந்துள்ள ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, சீன பிரதமர் லி கியாங்-ஐ சந்தித்து பெல்ட் அன்ட் ரோடு திட்டத்திலிருந்து இத்தாலி விலக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதையடுத்து இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி  தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சீன பிரதமர் லி கியாங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால் சீன பிரதமர் லி கியாங் வேண்டுகோளை இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தின் அடுத்த கூட்டம் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த திட்டத்தில் இருந்து இத்தாலி விலக முடிவு செய்து இருப்பது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X