Janu / 2026 மார்ச் 29 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்புள்ளை - வாவலவெவ பிரதான வீதியில், கண்டலம குளக்கட்டின் (Bund) மீது பயணித்த ஜீப் வண்டி ஒன்று குளத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஏற்படவிருந்த பெரும் அசம்பாவிதம் நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருமண நிகழ்வொன்றில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் இந்த விபத்து நேர்ந்த சந்தர்ப்பத்தில் வாகனத்தில் பயணித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
வாவலவெவ பகுதியிலிருந்து தம்புள்ளை நோக்கி குளக்கட்டின் மீது வெளிநாட்டு தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். இதன்போது, குறித்த மோட்டார் சைக்கிள் ஜீப் வண்டிக்கு நேராக வந்ததால், அவர்களை காப்பாற்றுவதற்காக ஜீப் வண்டியை திருப்பியபோது அது கட்டுப்பாட்டை இழந்து சரிவில் இரண்டு முறை புரண்டுள்ளது. இறுதியில் குளத்தின் நீர் மட்டத்திற்க்கு அருகிலிருந்த கருங்கல் ஒன்றில் மோதி வாகனம் நின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தம்புள்ளை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

39 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
43 minute ago
2 hours ago