2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஜூலை 9 அத்துமீறலால் ரூ.2 கோடி இழப்பு

Freelancer   / 2022 செப்டெம்பர் 14 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதியன்று, ஜனாதிபதி செயலகத்துக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் அத்துமீறி நுழைந்ததால் 2 கோடி ரூபாய்க்கும் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றத்தில் இன்று (14) அறிவித்தனர்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகளைத் திருடியமை தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் அறிவிக்கப்பட்டது.

கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் இதுவரை மதிப்பிடப்படவில்லை என்றும் குறித்த இழப்பை மதிப்பிடுமாறு மாவட்ட செயலாளரால் பிரதேச சபை செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சீ.ஐ.டியினர் மன்றுக்கு அறிவித்தனர்.

இதனையடுத்து, தொலைக்காட்சிப் பெட்டிகளைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .