Editorial / 2024 பெப்ரவரி 20 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருமணமான தம்பதி கைது செய்யப்பட்டபோது, அந்தப் பெண், இரண்டு குளிசைகளை விழுங்கிவிட்டார். அதனையடுத்து அப்பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வாந்தி எடுக்க வைக்கப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.
யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து வென்னப்புவ பொலிஸ் நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது முச்சக்கர வண்டியில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய திருமணமான தம்பதியினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்படும் போது சந்தேகநபரான பெண், 02 ஹெரோயின் கட்டிகளை விழுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, சந்தேக நபரான அப்பெண் மாரவில சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்டு மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அப்பெண் வாந்தி எடுத்தார். அப்போது, 01 கிராம் ஹெரோயின் கட்டிகள் 2 வெளியில் விழுந்தன என பொலிஸார் தெரிவித்தனர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago