Freelancer / 2022 ஜனவரி 31 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டாரின் டோஹாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் இலங்கையர் அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கட்டாரில் உள்ள இலங்கை தூதரகத்தின் தொழிலாளர் பிரிவின் தலைவர், பிரதேச பொலிஸாரிடம் வினவியதன் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டதாக பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் இலங்கை பிரஜை அல்ல என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியிருந்தனர்.
மேலும் குறித்த பகுதியில் உள்ள வைத்தியசாலைகளை பரிசோதித்த போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இலங்கை பிரஜை தொடர்பான தகவல்கள் எவையும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026