2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தீர்ப்பளித்த சட்டத்தரணிகள் இருவருக்கும் கடுஞ்சிக்கல்

Gavitha   / 2016 மார்ச் 02 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நால்வரிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சட்டத்தரணிகள் இருவர், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் மார்ச் மாதம் 9ஆம் திகதியன்று ஆஜராகுமாறு நீதிபதி கேமா சுவர்ணாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை சட்டஉதவி ஆணைக்குழுவின் அநுராதபுர காரியாலயத்தின் சட்டத்தரணி ஹுஸ்ரா பாத்திமா மற்றும் அந்தக் காரியாலயத்தின் சட்டத்தரணி ஒருவருமே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

அந்த நால்வரும், தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதாக, அவ்விரு சட்டதரணிகளும் ஆவணங்கள் பலவற்றில் கையொப்பங்களைப் பெற்றுக்கொண்டதாக அறியமுடிகின்றது.

நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிக்கு, முழுமையான அறிவிப்புகள் எவையுமின்றியே, கையொப்பங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஹொரவிபொத்தான முள்ளிப்பொத்தான செனவல்லிபுரத்தில் வைத்து, 1997ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில், பொலிஸ் கான்ஸ்டபிள்கள் நால்வர் பலியாகினர்.

ஒரு மாதத்துக்கு கட்டாயச் சிறைத்தண்டனை அனுபவிக்கவும் ஒரு வருடம் புனர்வாழ்வுக்குச் செல்வதற்கு, நீதிமன்றத்தின் முன்னிலையில் வைத்து தங்களுடைய குற்றங்களை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாக, சட்ட உதவி ஆணைக்குழுவில் கைச்சாத்திட்ட சந்தேகநபர்கள் நால்வரும் தெரிவித்தனர்.

தீர்ப்பளிப்பதற்கு முன்னர் தண்டம் விதித்து, சந்தேகநபர்களிடம் கையொப்பம் பெற்றுக் கொண்டமையானது சட்டத்துக்கு முரணானது என்று சுட்டிக்காட்டிய அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி கேமா சுவர்ணாதிபதி, கையொப்பம் பெற்றுக்கொண்ட இரண்டு சட்டத்தணிகளையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .