2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தெஹிவளையில் சடலங்களாக மீட்கப்பட்ட நால்வரின் விவரம்

Kanagaraj   / 2016 மார்ச் 16 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை, கௌடான வீதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் பாதிக்கப்பட்ட நால்வர் மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வர்த்தகர், அவருடைய மனைவி, மகள் மற்றும் உறவினரின் பிள்ளை ஆகியோரே மரணமடைந்துள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார், மரணமடைந்தமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றனர்.

இந்த வீட்டில், கருகிய நிலையில், வர்த்தகரான ஹூசேன் மௌலானா (வயது 65), புட்டுவக மர்ஷான (வயது 58), காமரே த உஷானா (வயது 14), வியானா (வயது 13) ஆகியோரே மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .