2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

தங்கை கர்ப்பம்: சகோதரன் கைது

Editorial   / 2024 ஏப்ரல் 23 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து   கர்ப்பமாக்கிய மூத்த சகோதரனை கைது செய்வதற்கான விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

வயிற்று வலிக்காக வெல்லவாய ஆதார வைத்தியசாலைக்கு தாயுடன் சென்ற போது, ​​அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. விசாரணைகளின் போதே, 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை மூத்த சகோதரரால் பலமுறை வன்புணரப்பட்டமை வெளிச்சத்துக்கு வந்தது.

அதன்படி, சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு, வீட்டில் உள்ளவர்கள் தூங்கச் சென்றதும், ​​அவரது மூத்த சகோதரர் தன்னுடைய அறைக்கு வந்து, தொடர்ந்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும், தனது தந்தை மற்றும் தம்பியும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார்.

கடைசியாக ஜனவரி 12 மற்றும் ஏப்ரல் 19 ஆகிய திகதிகளில் மூத்த சகோதரர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. அச்சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில்,  சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் வெல்லவாய பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X