2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு

Editorial   / 2019 மார்ச் 19 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழாக குற்றங்கள் தொடர்பில் ஆகக் குறைந்த தண்டப்பணமான 50,000 ரூபாயை 5,00000 ரூபாய் வரை அதிகரிக்கவுள்ளதாக தொல்பொருட் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான அமைச்சரவை அனுமதி கடந்த வாரம் கிடைத்துள்ளதாகவும் அதற்கமையவே, இந்தத் தண்டப் பணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் தொல்பொருட் திணைக்களத்தின் பணிப்பாளர் பி.பீ. மண்டாவல தெரிவித்துள்ளார்.

குறித்த அமைச்சரவை அனுமதியானது தொல்பொருட் திணைக்களத்துக்குக் கிடைத்த பின்னர், சட்ட வரைவுகள் திணைக்களத்துடன் இணைந்து அதற்குத் தேவையன சட்ட திருத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .