R.Tharaniya / 2025 ஜூன் 04 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீதியை விட்டு விலகிய தண்ணீர் பௌசரின் இயந்திரம் கழற்று ஓடி விபத்துக்கு உள்ளானதில், மூன்று பிள்ளைகளின் தந்தையான, அந்த பௌசரின் சாரதி, சரத் சோமசிறி மரணமடைந்தார்.
இறக்குவானை- பொத்துபிட்டிய பிரதான வீதியில் மாணிக்க வத்த பகுதியிலயே இந்த விபத்து புதன்கிழமை (04) காலை இடம்பெற்றுள்ளது. இயந்திர கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
குறித்த வீதியில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. அதற்கு தண்ணீர் விநியோகித்து வந்த பௌசரே விபத்துக்கு உள்ளாகியுள்ளது. அவரது சடலம் இறக்குவானை வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொத்துப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மஹிந்த குமார்


26 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
2 hours ago