2025 மே 19, திங்கட்கிழமை

தந்தையை நாய்க்கூண்டுக்குள் போட்ட மகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

பலகொல்ல பகுதியில், தனது தந்தையை நாய்க்கூண்டில் அடைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட அவரது மகளை, நவம்பர் மாதம் 2ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதிமன்ற நீதவான் ஸ்ரீ நெத் விஜேசேகர உத்தரவிட்டுள்ளார்.

42 வயதான பெண்ணுக்கே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அவருடைய 72 வயதான தந்தையை அவர், நாய்க்கூண்டில் அடைத்து வைத்திருந்துள்ளார். நாய்க்கூண்டுக்குள் முதியவரொருவர் இருப்பதை, அப்பகுதியில் ரோந்துச் சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கண்டதன் பின்னர் இந்தப் பெண், அண்மையில் கைது செய்யப்பட்டார்.

செங்கற்கள் மற்றும் உலோகத் தட்டுக்களைக்கொண்டு செய்யப்பட்ட நாய்க்கூண்டிலேயே குறித்த முதியவர் அடைத்துவைக்கப்பட்டிருந்தார். கூண்டில் அடைக்கப்பட்டிருந்த முதியவர் தற்போது மெனிஹின்ன ஆதார வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X