2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தனிமைப்படுத்தலிலிருந்து தலைமறைவானவர் சிக்கினார்

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றாளர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து முடக்கப்பட்ட அக்குறணை பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று,  மாவத்தகம- பரஹாதெனிய பிரதேசத்தில் மறைந்திருந்த நபர் ஒருவர் மாவத்தகம சுகாதார பரிசோதகர்கள், மாவத்தகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


சந்தேகத்துக்குரிய நபரொருவர் பரஹாதெனிய பிரதேச வீடொன்றில் தங்கியிருப்பதாக சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே, இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


அக்குறணை- கரகொட பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், தனது மனைவி, பிள்ளைகள் பசியுடன் இருப்பதாக போலித் தகவல்களை தெரிவித்து?, குருகொட பிரதேச கிராம உத்தியோகத்தர் ஊடாக அலவத்துகொட பிரதேச செயலாளர், பொலிஸாரிடம் அனுமதிப் பெற்று இவ்வாறு மறைந்திருந்ததாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .