2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

தனியார் கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் குழு மோதல்

J.A. George   / 2024 மார்ச் 25 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இப்பாகமுவ - பக்மீகொல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றின் மாணவர்கள் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வதிவட தனியார் கல்வி நிறுவனமொன்றில் நேற்று (24) இரவு இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

03 ஆண் மாணவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையிலும், 04 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் பொல்கொல்ல பிரதேச வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, கொகரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .