Janu / 2026 மார்ச் 23 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு நிகராக ஹோமாகம - புறக்கோட்டை (வழித்தடம் இலக்கம் 138) தனியார் பேருந்துகள் திங்கட்கிழமை (23) அன்று சேவையிலிருந்து விலகியுள்ளன.
கடந்த ஒரு மாத காலத்திற்குள் எரிபொருள் விலை மூன்று முறை அதிகரிக்கப்பட்டுள்ளதால், பேருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த போதிலும், இதுவரை அதற்கான தீர்வு வழங்கப்படாத காரணத்தினால் தாம் சேவையிலிருந்து விலகியுள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக தினசரி பத்தாயிரம் ரூபாய் வரை நட்டம் ஏற்படுவதால், பேருந்துகளை செலுத்த வேண்டாம் என உரிமையாளர்கள் தமக்கு அறிவித்துள்ளதாக பேருந்து சாரதிகளும் நடத்துனர்களும் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக, இன்று தமது போக்குவரத்து தேவைகளுக்காக ஹோமாகம பிரதான பேருந்து நிலையத்திற்கு வருகை தந்த பெருமளவிலான பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
நிலைமையை சமாளிப்பதற்காக, ஹோமாகம டிப்போவினால் கிளை வீதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பேருந்துகள் 138 ஆம் இலக்க வழித்தடத்தில் தற்காலிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

41 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago