Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹம்பாந்தோட்டை, கட்டுவான ருக்மல்பிட்டி பகுதியில், கடமையில் இருந்த துணை தபால் அதிபர் மீது, மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட விவகாரம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
வீடுகளில் இருக்கும் நோயாளிகளுக்கான ஓய்வூதியத்தை வழங்குவதற்காக, நேற்று (06), கடமைக்குச் சென்றபோது, இனந்தெரியாத மூவரால், குறித்த தபால் அதிபர் தாக்கப்பட்டுள்ளார்.
இதன்போது காயமடைந்த தபால் அதிபர், ருக்மல்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இந்த விடயம் குறித்து, தானும், தபால்மா அதிபரும் பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தற்போது நாட்டில் காணப்படும் அசாதாரண சூழ்நிலையின் போது, பொதுசேவையில் ஈடுபடும் அதிகாரிகளின் கடமையை இலகுவாக எடுத்துச் செல்லக்கூடிய வகையில் இருப்பதற்கு, இந்தக் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குமாறு, தான் கோரியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் போது, பொதுக் கடமைகளில் ஈடுபட்டுள்ள பொது சேவகர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, அரசாங்கத்துக்கு உள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025