2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தமிழர்களின் ‘தங்கம்’: பதிலளிக்க ‘மந்தம்’

Kogilavani   / 2017 ஜனவரி 27 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தத்தின் பின்னர் மீட்டெடுக்கப்பட்ட, தமிழ் மக்களின் தங்கம் தொடர்பிலான கேள்விக்குப் பதிலளிப்பதற்கு இரண்டுவாரகால அவகாசத்தை அரங்சாங்கம் கோரியுள்ளது.  

நாடாளுமன்றம், சபாநாயகர் தலைமையில் நேற்றுக்காலை 10.30க்குக் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான வாசுதேவ நாணயக்கார, யுத்தத்தின் பின்னர் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான  பெருமளவு தங்கம், எங்கேனும் நம்பிக்கைப் பொறுப்பில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளதா எனக் கேள்வி கேட்டிருந்தார்.  

இடையீட்டு கேள்விகளாக, “இவ்வைப்பீடுகளைக் கணக்கிட முடியுமா? இதுவரையில் அவர்களின் தங்கம் அவர்களுக்கு திருப்பிக் கொடுக்கப்படவில்லையென முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளனவா?” எனவும் கேட்டிருந்தார்.  
கேள்விகளுக்குப் பதிலளித்துகொண்டிருந்த ஆளும்கட்சியின் பிரதம கொறடாவான, அமைச்சர் கயந்த கருணாதிலக, இக்கேள்விக்குப் பதிலளிப்பதற்கு இரண்டுவாரகால அவகாசத்தைக் கோரிநின்றார்.  

குறுக்கிட்ட நாணயக்கார எம்.பி, இக்கேள்விக்குப் பதிலளிப்பதற்கு, அரசாங்கம் ஆறாவது தடவையாக தவணை கேட்கிறது எனக்கூறியமர்ந்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .