2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்துக்கும் பூட்டு

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையமும், காலவரையரையின்றி மூடப்பட்டுள்ளது.

இன்று  (08) நண்பகல் 12 மணிக்குப் பின்னர், இந்தப் பொருளாதார மத்திய நிலையத்தைப மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, அந்த மத்திய நிலையத்தின் முகாமையாளர் அசங்க பிரதீப் தெரிவித்துள்ளார்.

இந்தப் பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதென்று தெரிவித்துள்ள அவர், பிரதேச செயலகங்கள் ஊடாக, வியாபாரிகளுக்கு தமது விளைச்சல்களை விற்பனை செய்ய முடியுமென்றும் கூறியுள்ளார்.

தம்புளை மற்றும் கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையங்கள், மறு அறிவித்தல் வரை, நேற்று (07) முதல் மூடப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், விவசாயிகளின் விளைச்சல்களை, பிரதேச செயலகங்கள் ஊடாகப் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டத்தின் கீழேயே, இந்தப் பொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .