2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

“திருமணம் ஆகி 10 நாள் தான் ஆகுது” அதுக்குள்ள வாந்தி: ஷாக்கில் புது மாப்பிள்ளை

Editorial   / 2025 ஜூலை 27 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

  தனியார் வங்கியின் இன்சூரன்ஸ் பிரிவில் மேலாளராக சேலத்தைச் சேர்ந்த சசிசேகர் (44) என்பவர்,  பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகளும் உள்ளனர். இதற்கு முன்னர் சேலத்தில் உள்ள மற்றொரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியிருந்தபோது, அதே அலுவலகத்தில் பணியாற்றிய திருமணமாகாத இளம்பெண் ஒருவருடன் நெருக்கமாக பழகினார்.

இந்நிலையில், அந்த இளம்பெண் கடந்த ஜனவரியில் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த வாலிபருடன் திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் திருமணமான 10 நாட்களுக்குள் வாந்தி எடுத்ததால் மருத்துவ பரிசோதனை செய்த போது, அவருக்கு 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கர்ப்பத்திற்கு காரணம் சசிசேகர் தான் என இளம்பெண் கணவரிடம் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, புதுமாப்பிள்ளை தனது நண்பரான கோபாலை அழைத்து, சசிசேகரை சந்தித்து கருவை கலைக்க ரூ.80 ஆயிரம் கேட்டு, அதை பெற்றும் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்தனர்.

இந்த விவகாரம் நிறைவடைந்ததாக நினைத்த சசிசேகருக்கு, பின்னர் கோபால் மீண்டும் பணம் கேட்கும் நோக்கத்தில் சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடிகள் மோகன் (பாஸ்ட் புட் மோகன்), பூமாலை ராஜன், உலகநாதனை அழைத்து வந்து மிரட்டினர். அவர்கள் சசிசேகரிடம், “படங்களை வெளியிடுவோம், ​பொலிஸில் புகார் கொடுக்கிறோம்” என மிரட்டி, மேலும் ரூ.10 லட்சம் பணம் கேட்டனர்.

இதனால் பயந்த சசிசேகர் ரூ.9 லட்சம் பணம் கொடுத்தார். ஆனால் அதன்பின் மீண்டும் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினர். இதனால் தாங்க முடியாமல் போன சசிசேகர், தான் ஏற்கனவே ரூ.9.80 லட்சம் அளித்திருப்பதாகவும், மேலும் பணம் கொடுக்க இயலாது எனவும் கூறினார். மிரட்டல்கள் தொடர்ந்ததால் அவர் அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சசிசேகர் அளித்த புகாரின் பேரில் பொலிஸார் விசாரணை நடத்தி, கோபால், பாஸ்ட் புட் மோகன், பூமாலை ராஜன், உலகநாதன் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் தற்போது தலைமறைவாக உள்ள நிலையில், பொலிஸார்அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். குறிப்பிடத்தக்கது, இந்த 4 பேரில் கோபாலைத் தவிர மற்ற மூவர் மீதும் ஏற்கனவே சேலம் டவுன் மற்றும் அழகாபுரம் காவல் நிலையங்களில் 5-க்கும் மேற்பட்ட வழிப்பறி, மிரட்டல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X