Editorial / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
தரமற்ற முறையில் நடத்திச் செல்லப்படும் பாடசாலை சிற்றுண்டிச் சாலைகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சி குறித்த அண்மைய ஆய்வில் அவர்கள் பல்வேறு ஊட்டச்சத்து பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மாணவர்களின் உணவுப் பழக்கம் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாடசாலையில் சுகாதாரமான உணவகங்களை பராமரிப்பது தொடர்பாக 31.12.2015 திகதியிடப்பட்ட சுற்றறிக்கை அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் துரித உணவு மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்களுக்கு பதிலாக, தேசிய ஊட்டச்சத்து கொள்கைக்கு இணங்க, சரியான ஊட்டச்சத்து தேவைகளை உள்ளடக்கிய தரமான உணவுகளை வழங்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் தரமான முறையில் நடத்தப்படுகின்றனவா என்பது குறித்து, பொது சுகாதார பரிசோதகர்களின் உதவியுடன் கல்வியமைச்சு கண்காணிக்கவுள்ளது.
தற்போது, பாடசாலை சிற்றுண்டிச் சாலைகள் தொடர்பில் தகவல்கள் சேகரிக்கப்படுவதுடன், மூன்றாவது தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பித்த பின்னர், தேவையான தரத்தை பூர்த்தி செய்யாத உணவகங்கள் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
3 hours ago
6 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
02 May 2026