2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தலைமை பிக்கு படுகொலை ; 18 வயது பிக்கு கைது

Freelancer   / 2022 செப்டெம்பர் 15 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீதுவ - வேத்தேவ நந்தாராம விகாரையின் தலைமை பிக்குவின் படுகொலை தொடர்பில் 18 வயதுடைய பிக்கு இன்று கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார் என சீதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

சீதுவ – நந்தாராம விகாரையின் தலைமை பிக்கு நேற்று  சடலமாக மீட்கப்பட்டார். 

குறித்த தேரர் தங்கியிருந்த அறையின் கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்ததால், அதிகாரிகள் கதவை உடைத்து பார்த்தபோது, அவர் படுக்கையில் இறந்து கிடந்தார். அவரது கண்கள் கட்டப்பட்ட நிலையில், வாயில் துணி அடைக்கப்பட்டு காணப்பட்டது.

உயிரிழந்தவர் 50 வயது மதிக்கத்தக்கவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவருடன் விகாரையில் பணிபுரிந்த மற்றுமொரு பிக்கு காணாமல் போயுள்ளதாகவும், அவர் இருக்கும் இடம் தெரியவில்லை எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

மேலும் விகாரைக்கு சொந்தமான டிஃபென்டர் மற்றும் காரும் காணாமல் போனது தெரிய வந்தது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் சீதுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .