2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தவணைப்பணம் அறவீடு; ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன், எம்.இஸட்.ஷாஜஹான்

 

அரசாங்கத்தின் அறிவித்தலையும் மீறியே வங்கிகள் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ஆசிரியர்கள், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையைக் கருத்திற்கொண்டு, வங்கிகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகைக்கான தவணைப் பணத்தை, மூன்று மாதங்களுக்கு அறவிட வேண்டாம் என அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், அந்த அறிவித்தலையும் மீறி, இம்மாதத்துக்கான தவணைப் பணத்தை, வங்கிகள் அறவிட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, இந்த மாத வேதனத்தில் அறவிடப்பட்ட ஆசிரியர் மற்றும் அதிபர்களின் கடன் தவணைக் கட்டணங்களை, மீளவும், வங்கிகளில் வைப்புச் செய்யப்பட வேண்டுமென, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .