Freelancer / 2021 ஓகஸ்ட் 21 , பி.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தீவிரவாத தாக்குதலில் மேற்பரப்பில் தெரிவதைவிட கண்ணுக்குத் தெரியாத ஒரு பக்கம் இருப்பதாகத் தெரிகிறது என்று கொழும்பு மறைமாவட்ட பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித், இன்று (21) தெரிவித்தார்.
இந்த தாக்குதலின் உண்மையை யாராவது அடக்க முயன்றால், அவர்களை மங்கச் செய்து, அவர்களின் சக்தியைக் குறைத்து, மனசாட்சிக்கு ஆதரவாக நிற்கும் சக்தியைக் கொடுக்கும்படி கடவுளிடம் கேட்பதாக குறிப்பிட்டார்.
இந்த தாக்குதலின் விவரங்களை மறைத்து கைகளை கழுவ மக்களை முயன்றாலும் கடவுள் அதற்கு அனுமதிக்க மாட்டார் என்றும் பேராயர் தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிற்று தாக்குதல் இடம்பெற்று 28 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அதற்கு காரணமானவர்கள் யார் என்று வெளிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடு தழுவிய எதிர்ப்பு இன்று (21) இடம்பெற்ற அதேநேரத்தில் பேராயர் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை சேவையில் பங்கேற்றபோதே இவ்விடயங்களை அவர் தெரிவித்தார்.
39 minute ago
50 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
50 minute ago
57 minute ago
1 hours ago