2025 மே 07, புதன்கிழமை

“தாயின் அறிவுரையை கேட்டேன்:ரோஹித

Editorial   / 2024 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது தாய் கூறியதன் காரணமாகவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க முடிவெடுத்தாக மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்பதில்லை என தீர்மானம் எடுக்கப்பட்ட கூட்டத்தில் பங்கேற்றிருந்த  பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ஜனாதிபதி ரணிலை ஆதரிப்பதாக  அறிவித்திருந்தார்.

தனது இந்த முடிவுக்கான காரணத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“என் அம்மாவுக்கு 87 வயது. மகனே, மிஸ்டர் மஹிந்தவை விட்டுவிட்டு வீட்டுக்கு வராதே என்று 2015ஆம் ஆண்டு அவர் சொல்லியிருந்தார்.

ஆனால் இந்த முறை, மகனே, போய் ரணிலை ஜனாதிபதியாக வெற்றிபெற செய்வதற்கான வேலையைச் செய்யுமாறு கூறினார். அதனால்தான் இந்த முடிவை எடுத்தேன் என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X